க்ரைம்

ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் நிலத் தகராறில் கொலை

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை உடையார் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சேகர்(60). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தம்பி பாஸ்கரன் மகன் ஜெகனுக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜெகன், இவரது உறவினர்களான கலியபெருமாள், மோகனா ஆகியோர், சேகரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சேகர், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT