க்ரைம்

புதுச்சேரியில் இளைஞரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

செய்திப்பிரிவு

வில்லியனூர் அருகே முத்துப்பிள்ளைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (21). இவர் பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் அரும் பார்த்தபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பராஜன் (34). கட்டிடவேலை செய்து வந்தார். கட்டிடபணிகள் முடித்துவிட்டு லோகே ஷின் தந்தை ராஜசேகரிடம் மீதமுள்ள மணல், ஜல்லி ஆகியவற்றை விலைக்கு கேட்டுள்ளார்.

இதற்கு ராஜசேகர் மறுத்துவிட்ட தாக கூறப்படுகிறது. இவர் மீண்டும் கேட்கவே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கப்பராஜன், ராஜசேகரை கையால் தாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் இரவு வீட்டுக்கு வந்த லோகேஷிடம் நடந்த சம்பவம் பற்றி வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ், தனதுநண்பர் கோபாலன்கடை பகுதியைச் சேர்ந்த மற்றொரு லோகேஷை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கட்டிடத் தொழிலாளி தங்கப்பராஜன் வீட்டுக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த தங்கப்பராஜன், கோபாலன்கடையைச் சேர்ந்த லோகேஷை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாய மடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்தும வனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து தங்கப்பராஜனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT