மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன்(23). இவர் தனியார் உணவு விநியோக நிறுவன ஊழியராக உள்ளார். எஸ்.எஸ். காலனியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்பில் மே 12-ம் தேதி உணவு விநியோகம் செய்ய சென்றார்.
அப்போது, அங்கிருந்த குழந்தைகளை இவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த அபார்ட்மென்டில் வசிக்கும் ரோலண்ட் டோமினிக் பென்னட்டும், அவரது அத்தையும் சங்கரனை எச்சரித்தனர்.
ஆத்திரமடைந்த சங்கரன் ரோலண்ட் டோமினிக் பென்னட்டையும், அவரது அத்தையையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சங்கரனைக் கைது செய்தனர்.