க்ரைம்

இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கு: தி.மலை ஆசிரமத்தில் கர்நாடக இளைஞர் கைது - கர்நாடக காவல்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் 24 வயது இளம்பெண் மீது, அதே பகுதியில் வசிக்கும் நாகேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஆசிட் வீசி உள்ளார். காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பித்து சென்றவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து கர்நாடக மாநில காவல்துறையினர் தேடி வந்தனர்.

மேலும் நாகேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்களுக்கு வரும் அழைப்புகளை தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். அவரது புகைப்படம் மற்றும் விவரத்தை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் தகவலின் பேரில், திருவண்ணாமலையில் நாகேஷ் பதுங்கி இருப்பது உறுதியானது. கிரிவல பாதையில் உள்ளஆசிரமத்துக்கு வந்து செல்வது தெரியவந்தது.

நாகேஷை கர்நாடகமாநில தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்து அழைத்துசென்றனர். அவர், தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக காவி உடையில் நடமாடி வந்துள்ளார்.

SCROLL FOR NEXT