விருதுநகர்: சீட்டுப் பணத்தை திருப்பிக் கேட்டு சிலர் தகராறு செய்ததால் மனமுடைந்த திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆஷா (33). 5-வது வார்டு திமுக கவுன்சிலர். இவரது தாயார் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் பணம் கட்டியவர்கள் சிலர் பணத்தை திருப்பிக்கேட்டு தகராறு செய்து இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுத்தவர்கள் இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் கழிவறை யில் பயன் படுத்தும் ஆசிட்டை குடித்து கவுன்சிலர் ஆஷா தற் கொலைக்கு முயன்றதாக கூறப் படுகிறது. அவரை விருது நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள் ளனர்.
தன்னை இழிவாகப் பேசியதாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஆஷா புகார் அளித்தார். இதுதொடர்பாக நேருஜி நகரைச் சேர்ந்த மேகனா (24), மாரீஸ்வரி (33), கலைச்செல்வி (43) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.