தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், ஜெய மங்கலம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (27). இவர் சில்வார் பட்டியில் உள்ள வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை இவரது வீட்டில் புகுந்த 2 பேர், கடுமையாக தாக்கி விட்டு ரூ.17 ஆயிரத்து 500, மொபைல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் முருகனை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததுடன், பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி புகார் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதே ஊரைச் சேரந்த சூரியபிரகாஷ் (21), சிந்துவம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோரை தேடி வருகின்றனர்.