காட்பாடி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, ரயிலில் கேட்பாரற்று கிடந்த 17 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன். 
க்ரைம்

வேலூர் | ரயிலில் கடத்திய 17 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

வேலூர்: காட்பாடி வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் ரயிலில் கடத்திய 17 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை செல்லும் ரயில் நேற்று அதிகாலை காட்பாடி ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே காவல் துறை ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், முன்பதிவு செய்யப்பட்ட டி-2 பயணிகள் பெட்டியில் சோதனையிட்டதில் பொருட்கள் வைக்கும் இடத்தில் சந்தேகத்துக்கிடமாக 4 பைகள் இருப்பதை பார்த்தனர். அந்த பைகளுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் பிரித்து சோதனையிட்டனர்.

அந்த பைகளில் சுமார் 32 பார்சல்களில் 17 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT