நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் உள்ள அரசுதொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் நித்யலட்சுமண வேல்(58). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகளும் தலைமை ஆசிரியர், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நித்யலட்சுமண வேல் கைதுசெய்யப்பட்டார். இவர் இதற்கு முன்புபணியாற்றிய அரசு பள்ளியில் பாலியல் தொல்லை புகார் எழுந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.