க்ரைம்

கோவையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

கோவை: சென்னை வானுவம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடவர்தன் மகள் நந்தினி(22). இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்த நிலையில்நேற்று வகுப்புக்கு செல்லவில்லை. அவரது தோழிகள் வந்துபார்த்த போது, அறையில் நந்தினிதூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். விடுதி நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் முன்னரே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸார் கூறும்போது,‘‘ மாணவி நந்தினி முதலில் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியை வைத்து கை மணிக்கட்டை வெட்டிஉள்ளார். இதனால் ரத்தம் வெளியேறியுள்ளது. பின்னர், அவர் துப்பட்டாவால், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில்கடிதம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. கடைசியாக காலை 7.30மணி அளவில் அவரது அம்மாவிடம் செல்போனில் பேசி உள்ளார். தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT