ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் சாய்பாபா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனுமுத்து (35). இவரது வீட்டின் பூட்டு நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு 2 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதேபோல, அனுமுத்து வீட்டின் எதிர் வீட்டைச் சேர்ந்த இளவரசன் (32). என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் 2 பவுன் தங்க நகை, வெள்ளி கால் கொலுசு களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், சாய்பாபா குறுக்கு தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு 3 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிபொருட்கள், ரூ.13 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல, ஆம்பூர் டவுன் ஜவஹர்லால் நேரு தெருவைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் சுரேஷ்சண்முகம் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.