புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57). இவரது இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தினேஷ் (24). புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் பிரச்சினை ஏற்பட்டது. இதை வீட்டிலிருந்த தினேஷ் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தியை அவர் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசமடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தினேஷின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
அரியாங்குப்பம் போலீஸார் சம்பவஇடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தினேஷை மீட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்ஏற்கெனவே தினேஷ் இறந்துவிட்டதாகதெரிவித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.