கோவை: கோவை இருகூர் அருகேயுள்ள சதீஷ் நகரைச் சேர்ந்தவர் சிவகணேஷ் (40). இவர், கடந்த 14-ம்தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார்.பின்னர், கடந்த 18-ம் தேதி கோவைக்கு அனைவரும் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. வீட்டிலிருந்த பொருட்களும், பீரோவில் இருந்த பொருட்களும் கலைந்து கிடந்தன. பீரோவில் பரிசோதித்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகணேஷ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.