மதுரை: கடன் பாக்கியைக் கேட்ட டீகடைக்காரரைத் தாக்கியவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த தீபக், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது ஊர் டீ கடையில் கடன் பாக்கி ரூ.160-ஐ கொடுக்காமல் டீ கேட்டு தர மறுத்த கடை உரிமையாளரை கத்தியை காட்டி பொருட்களைச் சேதப்படுத்தியதாக என்னை போலீஸார் கைது செய்தனர். இது பொய் வழக்கு. புகாரில் கூறியபடி நான் நடந்து கொள்ளவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தினமும் முசிறி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.