க்ரைம்

வேலூர் | கஞ்சா, குட்கா சோதனை - 22 நாட்களில் ரூ.31 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் நடத்தப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா தொடர்பான சோதனையில் இதுவரை ரூ.31 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது என காவல் கண் காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய தாவது, ‘‘தமிழகத்தில் கஞ்சா ஊடுருவலை தடுக்க மாநிலம் முழுவதும் ‘ஆபரேசன் கஞ்சா 2.0’ சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பான சோதனை தொடங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பஜார் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது.

மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா தொடர்பான சோதனையில் இதுவரை 28 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் மதிப்பிலான 73.8 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

144 பேர் கைது

அதேபோல வேலூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் சோதனை நடத்தப்பட்டதில் இதுவரை 134 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, அதில் 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து 23 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் 2,739 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT