க்ரைம்

மதுரை இளைஞரை காரில் கடத்தி ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை பறித்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மதுரை மாவட்டம், கே.புதூரைச் சேர்ந்தவர் முரளி (34). இவர், ஆன்லைனில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், முரளி தன்னிடம் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 2 வைரக்கற்களை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

இதைப் பார்த்த திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (27) என்பவர், தொலைபேசியில் முரளியை தொடர்புகொண்டு வைரக் கற்களை வாங்கிக்கொள்வதாகக் கூறி, திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். இதை நம்பிய முரளி, வைரக் கற்களுடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவரை முத்துகிருஷ்ணன், தனது கூட்டாளிகளான மஞ்சுவிளையைச் சேர்ந்த பால்சிம்சோன்(29), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மகேஷ்(32) ஆகியோர் வாடகைக் கார் மூலம் சிதம்பராபுரம் அருகே அழைத்துச் சென்று வைரக் கற்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் முரளி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணன், பால்சிம்சோன், மகேஷ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த வைரக் கற்களை மீட்டனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT