குழந்தைத் திருமணம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் அக்ரஹார வீதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு, அவரது பெற்றோர் திருப்பூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது, அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு 18 வயது பூர்த்தியடைய வில்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.