புதுச்சேரி: நாமக்கல் பரமத்தி சாலையைச் சேர்ந்தவர் அஸ்வின் (25). புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் கடந்த 8-ம்தேதி நள்ளிரவு தன்னுடன் படிக்கும் ரங்க ராமானுஜம் என்பவருடன் புதுச்சேரி பாண்டி மெரினாவுக்கு காரில் சென்றார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த3 பேர் அஸ்வின் மற்றும் ரங்க ராமானுஜம் இருவரையும் வழிமறித்து தாக்கி, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறித்துக் கொண்டனர். மேலும், ரங்க ராமானு ஜம் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அஸ்வின் ஒதியஞ் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது வம்பாகீரப் பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேஷ் (25), தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த வசந்த் (25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து செயின் மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி குமரேஷ், வசந்த் இருவரையும் காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.