புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக அங்குள்ள காவல் நிலையத் துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 7-ம் தேதி லாஸ் பேட்டை போலீஸார் மற்றும் சிறப்புஅதிரடிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது 400 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் வைத்திருந்த புதுச்சேரி கருவடிக்குப்பம் மகாவீர் நகரைச் சேர்ந்த தினேஷ் (எ) வீரப்பன் (28) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷீக்கு மதுரைபழங்காநத்தம் வசந்தா நகரைச் சேர்ந்த பொன்னுராஜ் (எ) ராஜ் (57) என்பவர் கஞ்சா வழங்கியது தெரிய வந்தது. அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, புதுச் சேரி புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் பொன்னுராஜை கைது செய்த போலீஸார், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர், 20 கிலோ கஞ்சாவை புதுச்சேரிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
மேலும் இவருடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த அன்பழகன் (61), அம்மாவட்டி பகுதியைச் சேர்ந்த மொக்கராசு (66) ஆகியோர் வந்த தும், அவர்கள் கொண்டு வந்த 20 கிலோ கஞ்சாவை லாஸ்பேட்டை கவிக்குயில் நகர் கென்னட் (40) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருப் பதும் தெரிய வந்தது.
இவர்கள் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து, கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, புதுச்சேரியில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளைசெய்து வந்துள்ளனர். இதையடுத்து பொன்னுராஜ் அளித்த தகவலின் பேரில் அன்பழகன், மொக்கராசு, கென்னட் ஆகியோரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து கென்னட் வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்த ரூ.10லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா, ரூ.3.17 லட்சம் ரொக்க பணம்,9 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.