கோவில்பட்டி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சின்னகொல்லம் பட்டியைச் சேர்ந்த தாமஸ் சாமுவேல் (57). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் அரசு உதவிபெறும் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தாமஸ் சாமுவேலை கைது செய்தனர்.