புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். இங்கு செல்வமணி என்பவர் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இவர், அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்ப டுகிறது.
இது குறித்து அந்த மாணவர் தனது தாய் பணிபுரியும் இடத்துக்கு சென்று கூறியுள்ளார். இதனை அறிந்த செல்வமணி அங்கு சென்று மாணவரின் தாயை மிரட்டும் தோணியில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுபற்றி மாணவரின் தாயார் தனது ஊர் பெரியவர்கள் மற் றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் செல்வமணியை கண்டிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, அந்த குறிப்பிட்ட மாணவரின் தாய் புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அதன்பேரில் குழுவின் தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் தேங்காய்த்திட்டு அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், மாணவர் துன்பு றுத்தலுக்கு ஆளானது உறுதியானது. இச்சம்பவம் தொடர் பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை தலைமைக்கு குழந்தைகள் நலக்குழு பரிந்துரைத்தது. இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின்பேரில் முதலியார்பேட்டை போலீஸார் கராத்தே மாஸ்டர் செல்வமணி மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.