கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும்போலீஸார் நடத்திய சோதனையில் குட்கா விற்பனை செய்த 14பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கஞ்சா விற்பனைசெய்த சிதம்பரம் பூதந்கேனிமுகமது (24), காட்டுமன்னார்கோவில் மா.கொளக்குடி கரப்பான் பூச்சி என்கிற பைஜி ரகுமான்(33),சந்தை தோப்பு புரூஸ்லி என்கிற ஆனந்த் ( 21), விருத்தாசலம் திருவிக நகர் ராஜசேகர் (31), தப்கன் நகர் அப்துல் அகமது ( 23), கோட்டேரி சிவகுமார்( 26), அம்பேத்கர் நகர் நெடுமாறன்( 25), சௌந்தரராஜன் நகர் இளையராஜா( 25), வேப்பூர் கிழக்குதெரு தமிழரசன் (22) நெய்வேலி வட்டம் 11-ல் வெங்கடேஷ்குமார்( 29), கடலூர் குணமங்கலம் 17 வயது சிறுவன் ஆகியோ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தேதி முதல் இதுவரை கஞ்சா விற்பனை செய்த 108 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 8.518 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல் குட்கா விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப் பட்டு அவர்களிடமிருந்து 21.77 கிலோகுட்கா பறி முதல் செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள்
குமராட்சி அருகே உள்ள தில்லைநாயகபுரம் மெயின் ரோட்டில் ஒரு மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சாமிநாதன் (42) என்பவரை இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்கு 4 மூட்டைகளில் வைத்திருந்த ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மளிகை கடை உரிமையாளருக்கு அந்த போதை புகையிலையை சப்ளை செய்த ஜித்தாந்தர் சிங் (38) என்பவரையும் கைது செய்தனர்.