சிதம்பரம் அருகே கல்லூரி மாணவிதற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் காதலனை போலீஸார் கைது செய் தனர்.
சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணன். இவரது மகள் அஜினாதேதி (21). இவர் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ளஅரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சிமுதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 30-ம்தேதி அதிகாலை தன்னை குளிக் கும்போது வீடியோ எடுத்து ஒருவர் மிரட்டுவதாக கடிதம் எழுதி விட்டு, அஜினாதேவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீ ஸார், மாணவியின் செல்பேசியை ஆய்வு செய்து விசாரணை நடத் தினர்.
இதில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தூரத்து உறவுக்காரரான கடலூர் வட்டம் ஆண்டார்முள்ளிபள்ளம் அருகே உள்ள நயினார்குப்பத்தைச் சேர்ந்த லோகநாதன் (21) என்ப வர், மாணவி படிக்கும் அதே கல்லூரியில் முதுகலைப் கணிதம் படித்து வந்தார்.
இவரும் மாணவியும் கடந்தஇரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாண விக்கு வெளிநாட்டில் இருக்கும் வேறு ஒருவரை திருமணம் செய்ய வீட்டில் முடிவெடுத்துள்ளனர். அதற்கு லோகநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவ ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது லோகநாதன், ‘காதலிக்கும் போது எடுத்த புகைப் படங்களை வெளிநாட்டில் இருப்ப வருக்கு அனுப்பி விடுவேன்’ எனக் கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி அஜினாதேதி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், நேற்று அவரை கைது செய்தனர்.