ராமநாதபுரம் அருகே மூக்கையூர் கடற்கரையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(19). இவரை 19 வயது கல்லூரி மாணவி காதலித்துள்ளார். இவர்கள் மார்ச் 23-ம் தேதி ராமநாதபுரம் அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். அப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 இளைஞர்கள் காதல் ஜோடியை மிரட்டி நகை, பணம், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர், ஹரிகிருஷ்ணனை தாக்கி, துப் பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதனால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன், அருப்புக் கோட்டையில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றார். இது குறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்தபோது, தனது கண் முன்னே காதலியிடம் 3 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் பதுங்கி யிருந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன்(24), விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(20) ஆகியோரை மார்ச் 25-ல் பிடிக்க முயன்றபோது சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தலைமைக் காவலர் கருப்பசாமி ஆகியோரை அவர்கள் வெட்டிவிட்டு பைக்கில் தப்பினர். இருவரையும் போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும் பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்(21) என்பவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் அருப் புக்கோட்டை நீதித்துறை நடுவா் முன்னிலையில் வாக்கு மூலம் பெறப்பட்டது. அதில் தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு அருப்புக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மாண விக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்மேஸ்வரன், தினேஷ்குமார், அஜீத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு ராமநாதபுரம் எஸ்பி மேற்பார்வையில், சாயல்குடி காவல் ஆய்வாளா் விசாரணை அதிகாரியாகவும், அவருக்கு உதவ சாயல்குடி எஸ்ஐ ஆய்வாளர், கமுதி ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.