க்ரைம்

தூத்துக்குடி | தாய் கொலை - சிறுமியிடம் போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக, சிறுமியின் தந்தை மனைவியை பிரிந்து சென்று, தனது மற்ற 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சிறுமியை அவரது தாய் சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது நண்பர்களான முள்ளக்காட்டைச் சேர்ந்த தங்ககுமார் (28), கண்ணன்(22) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இருவரும் தங்களது மற்றொரு நண்பருடன் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் சிறுமியின் தாய் சேலையால் கழுத்தை இறுக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். பின்னர் கண்ணன் உட்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்த தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக சிறுமி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT