ஆசிரியை ரேகா 
க்ரைம்

விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு வெட்டு: அடையாளம் தெரியாத மாணவர் குறித்து போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

விருத்தாசலத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை, அடையாளம் தெரியாத மாணவர் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார் மனைவி ரேகா. இவர், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டுக்கு வந்தார். மீண்டும் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஒரு மாணவர் ஓடிவந்து, ஆசிரியை ரேகாவின் பின்பக்க தலையில் கத்தியால் வெட்டினார். இதனால் அவர் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் அந்த மாணவர் தப்பியோடியுள்ளார்.

காயமடைந்த ஆசிரியை ரேகா, விருத்தாசலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி போலீஸில் புகார் அளித்தார். மாணவர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT