க்ரைம்

'கைதிகளுக்கு செல்போன், கஞ்சா' - மதுரை மத்திய சிறையில் 2 காவலர்கள் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மத்திய சிறையிலுள்ள விசாரணை, தண்டனைக் கைதிகள் 7 பேருக்கு மொபைல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சிறைக்காவலர்கள் சிலர் வழங்கியதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் சிறைக் காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகளால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இது தொடர்பாக சிறப்புக் குழு அமைத்து தற்காலிகப் பணி நீக்கத்துக்குள்ளான காவலர்கள் மற்றும் கைதிகளிடம் சிறை நிர்வாகம் விசாரணை நடத்தியது.

கடந்த 5 மாதங்களாக இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக சிறைக்கைதிகளுக்கு மொபைல் போன்கள் வழங்கியதுடன் பலமுறை கைதிகளை வெளியில் பேச வைத்ததும், போதைப்பொருட்களை வழங்கியதும் தெரிந்தது.

SCROLL FOR NEXT