கவிதா, முத்துகுமாரி. 
க்ரைம்

கருக்கலைப்பு செய்ததால் பெண் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சியில் இரு பெண்கள் மீது குண்டர் சட்டம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த சங்கராபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ததில் கடந்த மாதம் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (22). இவர், அதே ஊரில் உள்ள மெடிக்கல் ஸ்டோரை அணுகி, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கருக்கலைப்பு செய்தபோது அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரிஷிவந்தியம் காவல்நிலையத்தினர், மெடிக்கல் கடையின் உரிமையாளரான மணிகண்டன் மனைவி முத்துகுமாரி மற்றும் மற்றும் அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மனைவி கவிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் சிறையில் அடைக்கஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து, நேற்று முன் தினம் வேலூர் சிறையில் உள்ள முத்துகுமாரி, கவிதா ஆகிய இருவருக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடிதம் காவல்துறையினரால் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT