புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (39). இவரது மனைவி அழகுமீனா (34).
இவர் அண்ணா சாலையில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் அழகு நிலையத்தில் வேலை பார்த்தது கணேசனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அழகு நிலையத்துக்குச் சென்ற கணேசன், அழகு மீனாவுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில்தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து, அழகு மீனாவின் உடல் மீது வீசி தீ வைத்துவிட்டு, தப்பியோடிவிட்டார்.
தீக்காயமடைந்த அழகு மீனா சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இதுகுறித்து ஒதியஞ் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணே சனை இரவு கைது செய்தனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட அழகு நிலையம் உரிய உரிமத் துடன் இயங்குகிறதா என புதுச் சேரி நகராட்சி அதிகாரிகள் நேற்றுநேரில் பார்வையிட்டு ஆவணங் களை ஆய்வு செய்தனர்.