வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப் பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான நகர காவல் துறையினர் வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அம்பலூர் பகுதியில் மறைவான இடங்களில் சாராயம் விற்பனை செய்து வந்த ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த உமாசங்கர்(36), கொடை யாஞ்சி பகுதியைச் சேர்ந்த வேலு (48), வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த அம்சவேணி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து தலா 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.