க்ரைம்

விழுப்புரம் அருகே மோட்சகுளத்தில் 2 திருடர்கள் கைது: நகை, பைக் பறிமுதல்

செய்திப்பிரிவு

விழுப்புரத்தை அருகே மோட்சகுளம் கிராமத்தில் நேற்று முன்தினம் வளவனூர் போலீஸார் ரோந் துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (25), அன்பரசன் (23) என்பது தெரியவந்தது. இருவரும் 15.9.2021-ல் எஸ்.மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் செந்தில்குமரன் (43) என்பவரது வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி கொலுசுகளை கொள் ளையடித்தது தெரியவந்தது. பல இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அருள்ராஜ், அன்பரசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளையடித்த நகைகளில் சில நகைகளை விற்று வாங்கிய 2 பைக்குகள் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT