க்ரைம்

தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

புதுச்சேரி சோலை நகர் வன்னி யர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பு லட்சுமி (47). இவரது மகன் சரவ ணன் (25). கூலி வேலைக்கு சென்றுவந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த சரவணன்இரவு தாமதமாக வீடு திரும்பியுள் ளார். இதை சுப்புலட்சுமி கண்டித்துள்ளார்.

பின்னர் தாயும், மகனும்தனித்தனி அறைகளில் தூங்கியநிலையில், மறுநாள் நீண்ட நேரமாகி யும் சரவணன் இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுப்புலட்சுமிகதவை தட்டியும் திறக்கப்பட வில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சரவணன் புடவையால் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT