பெரணமல்லூர் அருகே வேன் மோதியதில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ஜோதி. இவரது மகன்கள் விக்னேஷ் (7), சர்வேஷ்(4). இருவரும் வாழைப்பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பள்ளி முடிந்து வேன் மூலம் இருவரும் வீட்டுக்கு நேற்று மாலை வந்துள்ளனர். வேனில் இருந்து 2 பேரும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர். பின்னர், வேன் முன்பு சிறுவன் சர்வேஷ் சென்றுள்ளார்.
இதையறிந்த அவனது அண்ணன் விக்னேஷ் சத்தமிட்டுள்ளார். இதனை கவனிக்காமல் வேனை, அதன் ஓட்டுநர் தமிழ்செல்வன் இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவன் சர்வேஷ் மீது வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெரணமல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.