க்ரைம்

வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் தங்க நகை திருட்டு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயாரை அடுத்த பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகநாதன்(45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(40). தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்குச் சென்றதாகத் தெரிகிறது. மாலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக யோகநாதனுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துஉள்ளனர். விரைந்து வீட்டில் பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 24 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக, அவரளித்த புகாரின் பேரில் காயார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுள்ள திருட்டுச் சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT