க்ரைம்

தாராபுரம் அருகே போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

உடுமலை: தாராபுரம் அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாசர்பட்டியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, உடுமலைப்பேட்டை காந்தி நகரைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்ட ராஜ் (42) என்பவரை கைது செய்தனர். தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT