க்ரைம்

உத்தமபாளையத்தில் 10 கிலோ கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சோதனையிட்டதில் அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் போடி அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விஜய் (22) எனவும் தெரிந்தது. அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT