க்ரைம்

காரைக்கால்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர்.

இதில், சிறுமி சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டு, போலீஸார் சில நாட்களுக்கு முன் சென்னை சென்று சிறுமியை மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியைச் சேர்ந்த முஷாரப்(22) என்பவர், சிறுமியுடன் வலைதளம் மூலம் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி, அம்பகரத்தூர் வந்து நேரடியாக பழகியதும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை சென்னைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் முஷாரபை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT