வேலுார் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகநாதன்(28). பெங்களூரில் பேக்கரி கடை நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், நேற்று காலை காவனுார்- லத்தேரி ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சரக்கு ரயில் மோதியதில், ஏகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.