க்ரைம்

இணையம் மூலம் பொருட்கள் விற்பதாக ஈரோடு இளைஞரிடம் ரூ.2.54 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

ஈரோடு: இணையம் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதாகக் கூறி இளைஞரிடம் ரூ.2.54 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஈரோடு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுதர்சன் (20). சமூக வலைதளங்கள் மூலம் சுதர்சன் வேலை தேடி வந்த நிலையில், இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை இயக்கியவர்கள், நாங்கள் சொல்லும் பொருட்களை விற்பனை செய்தால், கமிஷன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சுதர்சன் ரூ.2.54 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதற்காக சில பொருட்களை அனுப்பிய அவர்கள் ரூ.75 ஆயிரத்தை விற்பனைக் கழிவாகவும் வழங்கியுள்ளனர். ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த இணையதளம் முடக்கப்பட்டது. மேலும் அந்த வாட்ஸ்-அப் குழுவில் இருந்தும் சுதர்சன் எண் நீக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதர்சன், இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT