மைசூரில் இருந்து உதகைக்கு ஆம்புலன்ஸில் குட்கா கடத்தி வந்த ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸை, சபரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த ஆம்புலன்ஸ் மைசூரில் இருந்து உதகைக்கு வந்துள்ளது. உதகை ஹில்பங்க் பகுதியில் இரவு ரோந்தில்ஈடுபட்டிருந்த போலீஸார், ஆம்புலன்ஸை சோதனையிட்டபோது பல லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா மற்றும் போதை வஸ்துகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆம்புலன்ஸில், மேலும் மூன்று பேர் இருந்துள்ளனர்.
குட்கா மற்றும் ஆம்புலன்ஸை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் சபரேஷ்(20) மற்றும் மூவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சபரேஷ் மற்றும் குன்னூரைச் சேர்ந்த அபுதாஹீர் (22), முகமது (20), ஆஸ்கர் (19) ஆகியோரை உதகை ஜி-1 போலீஸார் கைது செய்தனர்.