வத்திராயிருப்பில் மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்ததாக ஆடு மேய்க்கும் தொழிலாளி போக்ஸோ வில் கைது செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம்(30). ஆடு மேய்த்து வருகிறார். இவர், 8-ம் வகுப்பு மாணவியை, பாலியல் நோக்கோடு தனியாக பேச வேண்டும் என வற் புறுத்தி வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் உறவினர்கள், அவரை எச்சரித்துள்ளனர்.
அதன்பிறகும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தனியாக பேச வரும்படி தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மகாலிங்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர்.