க்ரைம்

திருச்சுழி அருகே திமுக பெண் நிர்வாகி கொலை

செய்திப்பிரிவு

திருச்சுழி அருகே திமுக பெண் நிர்வாகி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சுழி அருகே உள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள்(52). திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மூர்த்தியும், அவரது மனைவி சோலைமணியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என நினைத்த மூர்த்தி நேற்று மாலை அவரது வீட்டுக்குச் சென்று கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ராக்கம்மாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT