மேல்மலையனூர் அருகே மேல்புதுப்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் பூபதி (23). இவர் கடந்த 2019-ம்ஆண்டில் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துகுமாரவேல் நேற்று பூபதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கில் தீர்ப்பு
சங்கராபுரம் அருகே செம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஐயன்குட்டி இளையராஜா (37). இவர் கடந்த 2011ல் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விழுப்புரம் மகளிர் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.