ரெட்டியார்பாளையம் ஜவஹர் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (62). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தை லாஸ்பேட்டை செல்ல பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பிறைசூடன், மோகன் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
வாடகைக்கு குடிவந்த இருவரும், தாங்கள் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும், புவனா என்பவர் பங்குதாரராக இருப்பதாகவும் கூறினர்.
வாடகை எடுத்த அவர்கள், தங்கமணிக்கு தெரியாமல், தீர்த்தராமன் என்பவருக்கு போக்கியத்துக்கு பேசி ரூ. 5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் தங்கமணிக்கு மாத வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாக கூறப்படுகிறது.
இதுபற்றி தங்கமணி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிறைசூடன், மோகன், தீர்த்தராமன், புவனா ஆகிய 4 பேர் மீதும்வழக்குப்பதிவு செய் தனர்.
இதில் பிறைசூடன், மோகன் இருவரையும் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். மற்ற இருவரை யும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிறைசூடன் பாஜக பிரமுகர் என்பது குறிப் பிடத்தக்கது.