க்ரைம்

விருதுநகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட இருவர் போக்ஸோவில் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே ஒரு ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தாய் உட்பட 2 பேரை போக்ஸோவில் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, அவரது தாயின் உடந்தையோடு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக 1098- எண்ணுக்கு அழைப்பு வந்தது.

அதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி, அந்த ஊருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்து விட்டதால், அவரது தாய்க்கும் கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டி முருகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து வசித்துள்ளனர். இந்நிலையில், பாண்டிமுருகன் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தாயிடம் கூறி சிறுமி அழுதுள்ளார். ஆனால், அவர் இதுபற்றி யாரிட மும் கூறக்கூடாது எனக் கூறி, சிறு மியை கைகளால் தாக்கி காயப் படுத்தியதாகத் தெரியவந்தது.

இதுகுறித்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் ஜானகி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் போக்ஸோவில் வழக்குப்பதிந்து பாண்டி முருகன் மற்றும் சிறுமியின் தாயை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT