க்ரைம்

புதுக்கோட்டை: அதிமுக நிர்வாகியின் வாகனத்தை எரித்த திமுகவினர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியின் 18-வது வார்டில் அதிமுக சார்பில் என்.பாரதியும், திமுக சார்பில் எஸ்.கவிதாவும் போட்டியிட்டனர். அதில், பாரதி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பாரதிக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த 22-வது வட்ட துணைச் செயலாளரான மாப்பிள்ளையார்குளம் மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.லோகாம்பாள், அவரது கணவர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதத்தில் சரவணன், லோகாம்பாள் ஆகியோரை திமுக வேட்பாளர் தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரவணன், லோகாம்பாளிடம் திமுக வேட்பாளர் தரப்பினர் தகராறு செய்ததுடன், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை மேற்கு 5-ம் வீதியைச் சேர்ந்த பெரியசாமி, அவரது மகன்கள் பிரபு, சரவணன், செந்தில் ஆகிய 4 பேர் மீது புதுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT