க்ரைம்

திருப்பத்தூர்: சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் கேத்தாண்டப்பட்டி அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கோபி (33).

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கோபி தனது இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினார். மல்லப்பள்ளி கொய்யாமேடு அருகே வந்த போது எதிரே வந்த கார் ஒன்று கோபியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த நாட்றாம் பள்ளி காவல் துறையினர் அங்கு சென்று கோபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT