க்ரைம்

திருப்பூர் நகைக்கடையில் திருட்டு வழக்கில் சென்னை, மகாராஷ்டிராவுக்கு விரைந்த தனிப்படை

செய்திப்பிரிவு

திருப்பூர் நகைக் கடையில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட 4 தனிப்படைகள், சென்னை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விரைந்துள்ளன.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகுக்கடை மற்றும் நகைக்கடைக்குள் கடந்த 3-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், 375 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம், 8 கிலோ வெள்ளியை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து,4 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவிகேமரா பதிவுகளைக் கொண்டுபோலீஸார் ஆய்வு செய்ததில், திருட்டு சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் வழியாக அவர்கள் சென்னைக்கு சென்றது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் சென்னைவிரைந்தனர். அதேபோல, சென்னையில் விசாரணையில் ஈடுபட்டநிலையில், 4 பேர் கொண்ட மர்மகும்பல் மகாராஷ்டிரம் மாநிலம்சென்றிருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். இதையடுத்து,மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தனிப்|படை போலீஸார் சென்றுள்ளனர்.

முன்னதாக, திருட்டு நிகழ்ந்த திருப்பூர் நகைக்கடை மற்றும் அடமானக் கடையில், மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு விசாரணையில் ஈடுபட்டார். சிசிடிவி கேமரா பதிவுகளை அவரது கட்டுப்பாட்டில் ஆய்வு செய்து, தனிப்படைகளை வேகப்படுத்தியுள்ளார். சென்னை, மகாராஷ்டிராவுக்கு விரைந்துள்ள தனிப்படையின் நகர்வுகளை தொடர்ந்து கவனித்து வருவதாக மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT