ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோண வாய்க்கால் ஆர்.என்.புதூர் பகுதிகளில், சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் 5 பட்டாக்கத்திகள் இருந்தது தெரியவந்தது. சித்தோடு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், ஈரோடு சூரம்பட்டி திருமூர்த்தி (38), சேலம் வெங்கநாயக்கன்பாளையம் பார்த்திபன் (26), திண்டுக்கல் மாவட்டம் நல்லம்பட்டியைச் சேர்ந்த ராஜூ (22), தாமோதரன் (23), வேடப்பட்டியைச் சேர்ந்த அய்யனார்(24), திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), வீரப்பன்சத்திரம் அருண்குமார் (34) என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் செல்பவர் களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து வந்த இவர்கள் ஏழு பேரையும் போலீஸார் கைது செய்தனர். இக்கும்பலில் இருந்து தலைமறைவான ராஜா, பிரபாகரன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.