க்ரைம்

மதுரை: பணம், மடிக்கணினி திருடியவர் கைது

செய்திப்பிரிவு

மதுரை கே.கே.நகர் சுப்பையா காலனியில் காஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்படுகிறது. இதன் முன்பக்கக் கதவின் பூட்டு நேற்று முன்தினம் உடைக் கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.10,400, மடிக்கணினி ஒன்று, மொபைல் போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். இதில் மானகிரி செய்யது அலி(40) என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT