க்ரைம்

திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ-வின் காரில் இருந்த நகை, பணம் திருட்டு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தி ரன், ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏவான இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாவித்திரி (46) மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 26-ம் தேதி காரில் கோவைக்கு வந்தனர். சிங்காநல்லூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றனர். தனது கைப்பை உள்ளிட்டவற்றை காரில் வைத்துச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து வந்துபார்த்த போது, காரின் கதவு கண்ணாடி உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது. அதிலிருந்த வளையல், சங்கிலி என 12 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் தொகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT